"மூணு பேரும் சேர்ந்து PROPOSE பண்ணாங்க.. ஓகே சொன்னதுக்கு காரணம் இது தான்.." ஒரே நேரத்தில் மூன்று பெண்களை மணந்த நபர்
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர், இரட்டையர்கள் போல பிறந்த மூன்று பெண்களை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் தென் பகுதியான காங்கோ என்னும் நாட்டைச் சேர்ந்தவர் லுவிசோ. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நட்டாலி என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
மூன்று பேரும் 'Propose'
தொடர்ந்து, லுவிசோ மற்றும் நட்டாலி ஆகியோருக்கு இடையே காதலும் மலர்ந்துள்ளது. இதன் பிறகு, தன்னுடன் பிறந்த மற்ற இரண்டு சகோதரிகளான நடாகே மற்றும் நடாஷா ஆகியோரை, தன்னுடைய காதலர் லுவிசோவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் நட்டாலி. மூன்று பேரும் ஒரே மாதிரி இருந்ததால் மிரண்டு போயுள்ளார் லுவிசோ.
ஒரே நேரத்தில் திருமணம்
ஒரு நிலையில், மூன்று சகோதரிகளும், தாங்களாக முன் வந்து லுவிசோவை காதலிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், திருமணம் செய்து கொள்ளவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், திக்குமுக்காடி போயுள்ளார் லுவிசோ. மூவரின் காதலயும் ஏற்றுக் கொண்ட அவர், அனைவரையும் திருமணம் செய்யவும் தயாராகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மூவரையும் ஒரே மேடையில் வைத்து, லுவிசோ திருமணம் செய்துள்ளார்.
பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை
காங்கோவில் ஒரு நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டபூர்வமாக இடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்து பேசும் லுவிசோ, "அவர்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் என்பதால், அனைவரும் தங்களின் காதலை தெரிவித்த போது, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. அது அத்தனை எளிதாக முடிவு கிடையாது. ஏனென்றால், என்னுடைய பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
காதலுக்கு எல்லையில்லை
ஒன்றை இழந்தால் தான், இன்னொன்று நமக்கு கிடைக்கும். மேலும், ஒருவருக்கு தங்களின் விருப்பப்படி செய்வதற்கான சொந்த வழி உள்ளது. இதனால், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. என்னுடைய முடிவை எனது பெற்றோர்கள் வெறுத்தார்கள். இதனால், அவர்கள் திருமணத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், காதலுக்கு எல்லை இல்லை என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்" என லுவிசோ தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு கடினமாக இல்லை
மேலும், மூன்று பேரும் தன்னிடம் காதலை வெளிப்படுத்திக் கொண்ட போது, ஏறக்குறைய தான் மயக்கம் அடைந்து போனதாகவும் லுவிசோ குறிப்பிட்டுள்ளார். மூன்று சகோதரிகளில் ஒருவர் இந்த திருமணம் பற்றி பேசுகையில், "நாங்கள் சிறு வயது முதல் அனைத்தையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டு வருகிறோம். இதனால், கணவரை மூவரும் பகிர்ந்து கொள்வது என்பது, எங்களுக்கு கடினமாக அமையவில்லை" என தெரிவித்துள்ளார்.
நடாகே, நடாஷா மற்றும் நட்டாலி ஆகிய மூன்று சகோதரிகளை லுவிசோ திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
