'கொரோனா தடுப்பூசி போட்டீங்களா'?... 'உங்களுக்கு செம ஆஃபர் காத்திருக்கு'... வங்கிகள் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு வங்கிகள் சில சலுகைகளை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என ஊக்கம் கொடுக்கும் நோக்கத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகை மீது அதிக வட்டி பெறலாம் என சில அரசு வங்கிகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இது குறுகிய கால சலுகையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகை மேதகு 0.30 சதவிகிதம் வட்டியை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது யூகோ வங்கி. UCOVAXI-999 என்ற திட்டத்தின் கீழ் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 999 நாட்களுக்கு இந்த வட்டி வழங்கப்படும் எனத் தெரிகிறது. வரும் செப்டம்பர் 30 வரையில் இந்த திட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் இதற்குத் தகுதியானவர்கள்.
இதே போல சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவும் Immune India Deposit Scheme என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது. வழக்கமான வட்டிவிகிதத்தைக் காட்டிலும் 0.25 சதவிகிதம் இந்த திட்டத்தில் அதிகம் எனச் சொல்லப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவிகிதம் இந்த திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் கூடுதலாக வழங்கப்படுகிறது.
வரும் நாட்களில் இதே போல மேலும் பல வங்கிகள் திட்டங்களை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் இதுவரை 23,61,98,726 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது டோஸ் பெற்றவர்கள் 4,66,02,979 பேர்.

மற்ற செய்திகள்
