'பிளாஸ்மா' தானம் செய்தால் 'அரசுப்பணி'யில் முன்னுரிமை... அதிரடியில் இறங்கிய மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிளாஸ்மா தானம் செய்தால் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சையில் தற்போது பிளாஸ்மா தானம் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த ஒருவர் உடலில் வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்திகள் இருக்கும். எனவே, அவர்களின் பிளாஸ்மாவை பிறருக்கு செலுத்துவதன் மூலம் அவரும் விரைவில் வைரஸில் இருந்து குணமடைகிறார்.இது பிளாஸ்மா தானம் எனப்படுகிறது.
பல்வேறு நாடுகளிலும் பின்பற்றப்படும் இந்த முறை தற்போது இந்தியாவிலும் பரவலாகி வருகிறது. பல்வேறு மாநிலங்களும் இந்த பிளாஸ்மா முறையை கையில் எடுத்துள்ளன. கர்நாடக அரசு பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்த நிலையில் அஸ்ஸாம் அரசு, பிளாஸ்மா தானம் வழங்குபவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹேமந்த் பிஸ்வா அளித்துள்ள பேட்டியில், ''ஒருவருடைய உடலிலிருந்து எடுக்கப்படும் 400 கிராம் பிளாஸ்மா மூலம் இரண்டு பேருக்கு சிகிச்சையளிக்க முடியும்.பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ஒரு சான்றிதழும் சுகாதாரத்துறை சார்பில் ஒரு கடிதமும் வழங்கப்படும். வருங்காலத்தில் அதை வைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் அரசாங்க வேலைகளில் முன்னுரிமை பெறலாம்.
பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசு வேலை நேர்காணலின்போது 2 மார்க் அதிகம் வழங்கப்படும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அஸ்ஸாம் வந்து பிளாஸ்மா தானம் செய்யலாம். அவர்களுக்குத் தேவையான விமான டிக்கெட்டுகள் இலவமாக வழங்கப்படும். மேலும் அவர்கள் அஸ்ஸாமின் விருந்தாளிகளாகக் கவனிக்கப்படுவார்கள்,'' என தெரிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பரவலாக கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
