"ஆத்தி,, இத எல்லாம் 'எப்படியா' முழுங்குறீங்க??"... ஆணின் வயிற்றை சோதனை செய்த டாக்டருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'... உடனடியாக நடத்த 'சர்ஜரி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅருணாச்சல பிரதேச மாநிலம் பசிகாட் (Pasighat) என்னும் பகுதியை சேர்ந்த 39 வயது நபர் ஒருவர், சில தினங்களுக்கு முன் டூத் பிரஷ் (Tooth Brush) மூலம் பல் தேய்த்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, தொண்டைக்கு அருகே பிரஷ் கொண்டு சுத்தம் செய்த போது, அந்த பிரஷ்ஷை எதிர்பாராத விதமாக அவர் விழுங்கி விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் பதறிப் போன நிலையில், உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், தொண்டைக்கு அருகே 'எக்ஸ் ரே' செய்து பார்த்த போது பிரஷ் எதுவும் இருந்ததாக புலப்படவில்லை. இதனையடுத்து வேறொரு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விழுங்கிய பிரஷ் வயிற்றிற்குள் சென்று விட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபருக்கு சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் தவறுதலாக அந்த நபர் விழுங்கிய டூத் பிரஷை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது அந்த நபர் பத்திரமாக உள்ளார். முன்னதாக, அந்த நபர் மருத்துவமனை செல்ல தாமதம் ஏற்பட்டிருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்தனர்.
பிரஷ் வயிற்றிற்குள் சென்ற போதும் இருந்த போதும் அந்த நபருக்கு வயிற்றுப் பகுதியில் எதுவும் வலி ஏற்படவில்லை என மருத்துவர்கள் ஆச்சர்யத்துடன் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லாத நிலையில் சில தினங்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.