"30 வருஷமா கஷ்டப்பட்டு வளர்க்குறேன்".. கை விரல்களில் நகம் வளர்க்க ஆசைப்பட்ட பெண்.. அதுக்குன்னு இவ்வளவா? வைரலாகும் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், 30 வருடங்கள் கஷ்டப்பட்டு தனது கை விரல்களில் நகங்களை வளர்த்து வருகிறார். இவருடைய புடைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் தனியே ஆசைகள் இருக்கும். சிலருக்கு ஜிம்மிற்கு சென்று உடலை பராமரிக்க பிடிக்கும். சிலருக்கு தங்களது அழகை மேம்படுத்த பிடிக்கும். அப்படி அமெரிக்காவை சேர்ந்த கோர்டெலியா ஆடம்ஸ் என்ற பெண்ணுக்கு நகம் வளர்ப்பது என்றால் கொள்ளைப் பிரியமாம். இதற்காக அவர் 30 வருடங்களை செலவிட்டிருக்கிறார்.
வினோத ஆசை
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர் கோர்டெலியா ஆடம்ஸ். 59 வயதான இவர், கடந்த 1989 ஆம் ஆண்டு கை விரல்களில் நகம் வளர்க்க ஆசைப்பட்டிருக்கிறார். அதன்படி அந்த வருடம் முதல் தனது நகங்களை பராமரிக்க துவங்கியுள்ளார் கோர்டெலியா ஆடம்ஸ். இதன் பலனாக 12 அங்குலம் வரையில் அவருடைய நகங்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றன. இதனால் தன்னை பார்ப்பவர்கள் வியப்படைவதாகவும் அது தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறுகிறார் ஆடம்ஸ்.
முன்னதாக 16 அங்குலம் வரையில் வளர்ந்திருந்த நகங்களை, வெட்டி 12 அங்குலமாக குறைத்திருக்கிறார் ஆடம்ஸ். இதன்மூலம் தனது அன்றாட வேலைகளை சிரமமின்றி செய்வதாகவும் கூறுகிறார் இவர்.
கேள்விகள்
தன்னிடம் பேசுபவர்கள், எப்படி மொபைல் போன்களை பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்பதாகவும், அதற்கு விரல் முட்டிகளை (knuckles) மூலம் தான் அவற்றை செய்வதாக பதிலளிப்பதாகவும் கூறுகிறார் ஆடம்ஸ். தனது விரல்கள் பிறரது கவனத்தை உடனே ஈர்ப்பதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதாக தெரிவிக்கும் இவர்," சில நேரங்களில் எதிர்மறையான விமர்சனங்களையும் சந்திக்கிறேன். ஆனால், அவற்றுக்கும் நான் பதில் சொல்ல தவறுவதில்லை" என்றார்.
அலங்கார நிபுணர்
நக அலங்கார நிபுணராக பணிபுரியும் இவர், தனது நகங்களை பராமரிக்க கூடுதல் நேரத்தை ஒதுக்குகிறார். வெளியில் செல்ல வேண்டியிருந்தால் நகங்களை அழகுபடுத்த இரண்டரை மணிநேரம் வரை செலவிடும் இவர், தனது நகங்களுக்கு பிரத்யேக வர்ணங்களை பயன்படுத்துகிறார். நகங்கள் தன்னுடைய உடல் தேவைகளுக்கு ஏற்றபடி மாறிவிட்டதாக கூறும் இவர், "என்ன வேலையில் ஈடுபட்டாலும் எனது நகங்கள் குறித்து கவனத்துடன் இருப்பேன்" என்கிறார்.
30 வருடங்களாக கை விரல்களில் நகங்களை வளர்த்துவரும் ஆடம்ஸ், சோசியல் மீடியாவிலும் தற்போது புகழ்பெற்றுவருகிறார்.