பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல்.. கரெக்ட்-ஆன TIME ல ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச மீம்.. வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jul 22, 2022 11:08 AM

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Anand Mahindra meme as Rishi Sunak closer to be next UK PM

Also Read | "இப்டி ஒரு அன்புக்கு தான்யா ஏங்கிட்டு இருக்கோம்.." சில்லென மழையிலும் சிலிர்க்க வைத்த தள்ளாடும் தம்பதி.. நெட்டிசன்களை உருக வச்ச வீடியோ..

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Anand Mahindra meme as Rishi Sunak closer to be next UK PM

ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இதில் இறுதிச் சுற்றில் நுழைந்திருக்கிறார். ஏற்கனவே நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில் ரிஷி முதலிடத்தை பிடித்திருந்த நிலையில் நேற்று முன் தினம் நான்காம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 137 வாக்குகளையும், லிஸ் டிரஸ் 113 வாக்குகளையும், பென்னி மோர்டான்ட் 105 வாக்குகளையும் பெற்றனர். விதிமுறைப்படி, கடைசி இடம் பிடித்த பென்னி மோர்டான்ட் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து, ரிஷி மற்றும் லிஸ் ஆகிய இருவரும் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். இதனையடுத்து பிரிட்டனின் புதிய அதிபரை கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். செப்டெம்பர் 5 ஆம் தேதி, இந்த முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anand Mahindra meme as Rishi Sunak closer to be next UK PM

வைரல் ட்வீட்

இந்நிலையில், பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் புகைப்படத்தை எடிட் செய்து சிலர் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில், பிரதமரின் வீட்டு வாசலில் ஏராளமான காலணிகள் இருக்கின்றன. இந்த புகைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து, "பிரிட்டன் -இந்திய நகைச்சுவையானது சுனக் இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. உண்மையான சோதனையானது கட்சி விசுவாசிகளின் பெரும் திரளுக்கு முன்னால் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | அடர்ந்த வனப்பகுதி.. நடுவே அனாதையாக நின்ற கார்.. "பக்கத்துல இருந்த புதர்'ல.." திடுக்கிட வைத்த சம்பவம்

Tags : #ANAND MAHINDRA #RISHI SUNAK #UK PM #ANAND MAHINDRA MEME AS RISHI SUNAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anand Mahindra meme as Rishi Sunak closer to be next UK PM | India News.