இந்தியாவிற்குள் வந்த ஓமிக்ரான்.. அறிகுறி உள்பட தெரிய வேண்டிய 10 உண்மைகள்

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Velmurugan P | Dec 02, 2021 05:25 PM

டெல்லி : தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி, ஐப்பான், பிரான்ஸ், ஜெர்மனி என பல்வேறு பரவி வரும்  ஓமிக்ரான்  வகை கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் வந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஓமீக்ரான் வைரஸ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள் இப்போது பார்ப்போம்.

omicron enter in india: what is the omicron symptoms?

1 ஓமிக்ரான் ஏன் ஆபத்தானது

உலகம் முழுக்க  100க்கன்ககான நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்டாவை விட இது அதிக முறை உருமாற்றம் அடைந்துள்ளது.  மொத்தம் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் தான் இது அதிக ஆபத்து கொண்டதாக உள்ளதாக  உலக சுகாதார மைய விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 வைரஸின் பெயர் என்ன

B.1.1.529 என்பது தான் ஓமிக்ரான் கொரோனா வைரஸின் பெயர். அதை பற்றி  அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் பிரியா சம்பத்குமார்  கூறும் போது,  இந்த ஓமிக்ரான் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்பிரிக்காவில். போட்ஸ்வானாவில் முதலில் கண்டறியப்பட்டது. நவம்பர் 9ம் தேதி கண்டறியப்பட்டது. சரியாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டு 3 வாரங்களை கடந்துவிட்டன. இது நீண்ட காலம்.   கவலை அளிக்க கூடிய கொரோனா  கவலை அளிக்க கூடிய கொரோனா

3 உலக சுகாதார மையம் என்ன சொல்கிறது

கடந்த 26ம் தேதி  உலக சுகாதார மையம்  கவலை அளிக்க கூடிய கொரோனா வகை என்று அறிவித்தது. ஏகப்பட்ட உருமாற்றங்கள் இருப்பது ஓமிக்ரான் கொரோனா வகையில் கண்டுபிடிக்கப்பட்டது.   ஓமிக்ரான் வைரஸ், அமெரிக்கா, ஜப்பான் பிரான்ஸ், பெல்ஜியம், போஸ்ட்வானா, ஜெர்மனி, ஹாங்காங், இஸ்ரேல், இத்தாலி, யுகேவில் இந்த ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.  இந்த வைரஸ்  தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. சில இடங்களில் டெல்டா வகையை விட வேகமாக பரவுகிறது. இதற்கு முன் எந்த வகையான கொரோனாவிற்கும் டெல்டா வகையை விஞ்சும் ஆற்றல் இல்லை. இது மட்டுமே டெல்டாவை விஞ்சி உள்ளது. எனவே இது ஆபத்தானது ஆகும்.

4 நிறைய உருமாற்றம்  

ஓமிக்ரான் வைரஸில் ஸ்பைக் புரோட்டின்களில் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளதால்,  உடலில் உள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி ஆற்றல், போன்றவை ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக வேலை செய்யாமல் போகும் வாய்ப்பு உள்ளது.  

5 தெரிய வேண்டிய உண்மை

தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா பரவிய பலருக்கு வேக்சின் போடப்படவில்லை. பலருக்கு ஒரு முறை மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது.   20-30 வயதுக்கு இடைப்பட்டவர்களே ஓமிக்ரான் வைரஸால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர்.   ஓமிக்ரான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று புதிய அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை.   

6 உலக நாடுகள் என்ன திட்டம்

உலக நாடுகள் இன்னொரு பெரிய அபாயத்தை எதிர்கொள்ள தயாராக இல்லை. எப்படியாவது தங்கள் நாட்டிற்குள் தென் ஆப்பிரிக்கா உள்பட ஓமிக்ரான் கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து பயணிகள் வருகைக்கு தடை விதிக்கவே விரும்புகின்றன. அமெரிக்கா. ஐரோப்பா, யு. கேவில் பல நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளிநாட்டு பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் சோதனைகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்தியா சர்வதேச விமான பயணிகள் சேவையை தொடருவது சந்தேகம் என்கிற நிலை உள்ளது.

7 முழுமையான தகவல் இல்லை

ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவக்கூடியதா அல்லது அதிக ஆபத்தானதா என்று இன்னும் முழுமையாக நமக்கு இதுவரை தெரியவரவில்லை. ஓமிக்ரான் கொரோனா பரவலை குறைக்க வேண்டும் என்றால் அதிக அளவில் தடுப்பூசி போடுவது நல்லது என்கிறார்கள். ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி போடாதவர்கள், ஒரு டோஸ் மட்டுமே போட்டவர்களுக்கு அதிகம் பாதித்து இருப்பது ஆரம்ப கட்ட தகவலாக தெரிகிறது. எனவே தடுப்பூசி போடுவது நல்லது.

8 தடுப்பூசி முக்கியம்

இன்னும் நம்மை விட்டு கொரோனா போகவில்லை எனவே மாஸ்க் அணிய வேண்டும். டெஸ்டிங்கை உயர்த்த வேண்டும். சர்வதேச அளவில் வேக்சின் போடும் அளவை அதிகரிக்க வேண்டும். ஜீன் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். எம்ஆர்என்ஏ வேக்சினில் ஓமிக்ரான் கொரோனா ஏற்றபடி வேகமாக மாற்றத்தை செய்ய முடியும் என்றாலும் பாதி உலக மக்களுக்கு இப்போது இருக்கும் வேக்சினே சென்று சேரவில்லை. எல்லோருக்கும் வேக்சின் சேரும் வரை யாருமே பாதுகாப்பானவர்கள் என்று சொல்ல முடியாது.

9 எப்படி கண்டுபிடிப்பது

பிசிஆர் டெஸ்ட் மூலமே ஓமிக்ரான் கொரோனாவை கண்டறிய முடியும்.    ஜீன் சோதனை செய்வதன் மூலம் இதை உறுதி செய்யவும் முடியும். ராபிட் ஆண்டிஜன் சோதனை மூலம் ஓமிக்ரான் கொரோனாவை கண்டறிய முடியுமா என்று உறுதியான தகவல் இல்லை.  

10 : அறிகுறிகள்

ஓமிக்ரான் வைரஸ் ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தாக்கியவர்களுக்கு சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் என தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ள  நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை இந்தியாவில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.omicron enter in india: what is the omicron symptoms?

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Omicron enter in india: what is the omicron symptoms? | Lifestyle News.