’வழக்கத்தை விட பிரகாசமாகவும், பெரிதாகவும் வானில் தோன்றும் சூப்பர் பிங்க் மூன்!’.. வைரல் ஆகும் ’அரிய நிகழ்வு!’ வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 07, 2020 10:24 PM

இளஞ்சிவப்பு முழு நிலவு என்று சொல்லப்படும் சூப்பர் பிங்க் மூன் வானத்தில் காணப்படும் அரிய நிகழ்வை பலரும் கண்டு வருகின்றனர்.

biggest and brightest Super pink moon visible in sky

தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வீடுகளில் இருந்தபடி அவரவர் கோணங்களில் இந்த முழு நிலவை பார்த்து வருகின்றனர். இந்த கொடிய கொரோனா சூழலால் துவண்டு போயிருக்கும் மக்களுக்கும் சற்றே உற்சாகம் தருவதாகவும் குழந்தைகளுக்கு குதூகலகமாகவும் இந்த முழு நிலவு வானில் தோன்றும் காட்சி மாறியுள்ளது என்று கூறலாம்.

பிங்க் மூன் என்று சொல்லப்பட்டாலும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த நிலவு, வழக்கமாக தோன்றும் நிலவின் அளவை விட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தெரிகிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 6.30 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 8 மணி வரை நீடித்திருக்கும். அதிகாலை 3 மணி அளவில் இன்னும் பிரகாசமா இந்தியாவில் தெரியும் என்றும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நேரத்தில் தெரியும் என்றும், இந்த நிகழ்வு மிகவும் அரிதாக வரும் நிகழ்வு என்றும் கூறப்படுகிறது.

பூமியில் இருந்து வழக்கமாக 3,84,400 கி.மீ தொலைவில் சுற்றி வரும் நிலவு வழக்கமாக, பூமிக்கு அருகாமையில் 3,56,907 கி.மீ தொலைவில் நீள்வட்டப்பாதையில் வரும்போது அந்த நாள் பௌர்ணமியாக இருந்தால் மட்டுமே

இந்த சூப்பர் மூன் தெரியும் என்றும் கூறப்படுகிறது.