‘ஸ்விம்மிங்லாம் தெரிஞ்சுதான் குதிச்சிருக்கோம்’.. வைரலாகும் யானைகளின் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Feb 26, 2019 12:55 PM

நம்மூரில் சின்னத்தம்பி யானை ட்ரெண்டாகியதைப் போல், கேரளாவில் இரண்டு யானைகள் முல்லைப் பெரியாற்றினை நீந்திக்கடக்கும் வீடியோ இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.

Elephant family swimming across the Periyar river Viral Video

யானைகள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழும் அபரிமிதமான பிறவிஜீவன்கள். அவற்றின் தனித்துவமான திறன்கள் பல. நீர் யானைகளாக இல்லாதபோதும் கூட, அவற்றால் நதிகளில் தன்னிச்சையாக நிந்திக்கடக்க முடியும் ஆற்றல் படைத்தவை. வற்றிப்போகும் நீர் நிலைகளின் நிலைதான் யானைகள் பெரும்பாலும் காடுகளில் இருந்து மனித வாழ்வியல் புற நகரங்களுக்குள் புகுவதற்கு காரணமாக அமைகின்றன.

அப்படித்தான் கேரளாவில் இரண்டு யானைகள் பெரியாற்றின் குறுக்கே அசால்ட்டாக நீந்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கேரளாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி பிரவீன் கேசவன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவுக்கு 22 ஆயிரம் பார்வைகளும், 2,400 லைக்ஸ்களும் வந்துள்ளன.

இதுபற்றி வனத்துறை அதிகாரி பிரவீன் கேசவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காலை நேரம் குடும்பத்துடன் இந்த யானைகள் பெரியாற்றினை நீந்திச் செல்கின்றன. பெரிய உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் யானைகள் திறமையாக நீச்சல் அடிப்பவை.  அதற்கு அவற்றின் முதுகுத் தண்டு ஒத்துழைத்து வளைகிறது’ என்று பதிவிட்டு யானைகள் நீச்சலடிக்கும் வீடியோவையும் அதனுடன் இணைத்துள்ளார்.

இதற்கு பலரும் ‘நீர் யானைகளைத் தவிர்த்த பிற யானைகளுக்கு நீந்தவே தெரியாது என்றுதான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்றெல்லாம் கருத்து கூறி வருகின்றனர்.

Tags : #ELEPHANT #VIRALVIDEOS