வெறும் 72 மணி நேரத்தில் ரூ.6504 கோடிகளை அள்ளிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. எப்படி?
முகப்பு > செய்திகள் > வணிகம்ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது முதலீடு செய்து 6,504 ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார் இந்திய பங்குச்சந்தை வல்லுநர் ஆன ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர் இந்தியாவின் வாரென் பஃபெட் என்றே அழைக்கப்படும் அளவுக்கு பங்குச்சந்தையில் சாதித்து வருகிறார்.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 30-ம் தேதி அன்று தனது பங்கு வெளியீட்டினை செய்யதது. டிசம்பர் 2-ம் தேதி அன்று இந்த வெளியீடு முடிவடைந்தது. ஸ்டார் ஹெல்த் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமாகும்.
இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா இந்த ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தான் புரோமோட்டராக இருக்கிறார்.
ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தனது ஐபிஓ மூலம் கடந்த நவ்மபர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 6,400 கோடி ரூபாயை பெருக்கியது. பங்கு ஒன்று 870 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையில் என்ற கணக்கில் விற்கப்பட்டது. ஆனால், ராகேஷ் தனது 14.98 சதவிகித பங்குகளை தன்னிடமே வைத்துக் கொண்டார்.
கடந்த 2019 மார்ச் முதல் 2021 நவம்பர் வரையில் இந்த நிறுவனத்தில் ஒரு பஙு 155.28 ரூபாய் என்ற கணக்கில் வாங்கி வந்துள்ளார் ராகேஷ்.
இதன் அடிப்படையில் ராகேஷின் முதலீடு 1,287 கோடி ரூபாய் ஆக உள்ளது. தற்போது இதுதான் பெருகி மொத்தம் 6,504 கோடி ரூபாய் ஆக லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. இவரது மனைவி அதே நிறுவனத்தில் 3.23 சதவிகித பங்குகளை வைத்துள்ளார். இதனால் இந்தத் தம்பதியரின் தற்போதைய லாபம் 9,470 கோடி ரூபாய் ஆகும்.