Jail Others
IKK Others
MKS Others

தை பிறந்தால் 'வழி' பிறக்கும்.‌.. சென்னை புறநகர் மக்களுக்கு சூப்பர் நல்ல செய்தி

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Rahini Aathma Vendi M | Dec 10, 2021 05:30 PM

சென்னை புறநகர் மக்களுக்குக் கூடிய விரைவில் போக்குவரத்து தொடர்பான மகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது.

Chennai suburban people to get good news soon

வருகிற ஜனவரி 14-ம் தேதி முதல் சென்னை புறநகர் பகுதிகளுக்குச் செல்ல 3-வது வழித்தடத்தில் புறநகர் ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையில் சிறப்புத் தனி ரயில் பாதை உள்ளது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் ரயிலில் பயணிப்பவர்கள் அதாவது இந்த நிலையங்களுக்குள் ஏறி- இறங்குபவர்களுக்கு அடிக்கடி ரயில்கள் இருக்கும்.

Chennai suburban people to get good news soon

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மின்சார ரயில் வசதி உள்ளது. இதனால் இந்த ரயில்களில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இல்லையென்றாலும் பயணிகள் கவலை இல்லாமல் காத்திருந்து கூட செல்வார்கள். ஆனால், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ரயில்கள் அவ்வளவு அதிகம் இல்லை.

தாம்பரம் ரயில் நிலையத்துக்கு அடுத்த நிலையம் முதல் செங்கல்பட்டு வரையில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு ரயில்கள் அதிகப்படியாக கிடைக்காது. ஒவ்வொரு ரயிலுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அதிகம். இதனால் அந்த ரயில்களில் கூட்டமும் அதிகமாக இருக்கும். இதனால் பயணிகள் அடையும் சிரமத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது.

Chennai suburban people to get good news soon

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே தற்போது 3-வது ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளஹு. இந்தத் திட்டம் 268 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தாம்பரம்- கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோயில், சிங்கப்பெருமாள் கோயில்- செங்கல்பட்டு என 3 பிரிவுகளாக ரயில் பாதைகள் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

Chennai suburban people to get good news soon

இந்தப் புதிய வழித்தடத்தில் சிக்னல்கள் அமைக்கும் பணி, மின் இணைப்பு வழங்கும் பணி என அனைத்தும் நிறைவுற்று ரயில் பயணத்துக்கு ஏற்றதாக தயார்  ஆகியுள்ளது. வருகிற பொங்கல், அதாவது வருகிற ஜனவரி 14-ம் தேதி 2022 முதல் புதிய வழித்தடத்தில் ரயில்கள் பயணிக்க உள்ளன. இதனால் பயணிகளுக்கு செங்கல்பட்டு வரையில் அடிக்கடி ரயில்கள் இருக்கும்.

பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும், காத்திருப்பு நேரம் குறையும் எனப் பல பயன்கள் இருப்பதால் நிச்சயம் இந்த செய்தி சென்னை புறநகர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும்.

Tags : #TRAIN #CHENNAI LOCAL TRAINS #CHENNAI SUBURBS #சென்னை புறநகர் #சென்னை எலெக்ட்ரிக் ரயில் #மின்சார ரயில்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai suburban people to get good news soon | Tamil Nadu News.