"'கொரோனா'வால 'அடி' மேல 'அடி' வாங்கிட்டோம்"... "எல்லாருக்கும் மெயில் போட்டாச்சு"... முன்னணி நிறுவனத்தின் 'முடிவால்'... நொந்து போன 'ஊழியர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கிப் போனது. நாட்கள் செல்ல செல்ல, பல தொழிற்சாலைகள் குறைந்தபட்ச ஊழியர்களிடம் செயல்பட தொடங்கியது. அதே போல, டாக்சி தொழில்களும் முடங்கிப் போன நிலையில், ஊரடங்கு தளர்வுகளின் போது மீண்டும் டாக்சிகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டது.
ஆனாலும் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக உள்ளதால் டாக்சி போக்குவரத்து சேவையில் பெரிதாக வருவாய் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, ஓலா, ஊபர் உள்ளிட்ட முன்னணி டாக்சி நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, ஒரு பக்கம் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தும், பலரை வேலையை விட்டு தூக்கியும் வருகின்றது.
இந்நிலையில், ஓலா நிறுவனம் செலவுகளை குறைக்கும் நோக்கில் 1,400 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட 35 சதவீத ஊழியர்களை இந்தியாவில் பணிநீக்கம் செய்யவுள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 95 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. நிறுவனத்தின் முடிவால், ஊழியர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உறைந்து போயுள்ளனர்.
ஓலாவுக்கு முன்னதாக, ஊபர் டாக்சி நிறுவனமும் இந்தியாவில் 500 பேரை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.