"கொரோனா ரவுண்டு கட்டி அடிக்குது பாஸ்"... "என்ன பண்ணப்போறோம்னே தெரியல".. 'நிதி' இழப்பால் 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனங்கள்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள் நிதி நெருக்கடி காரணமாக, தங்களது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனங்கள் பல தங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக எச்சரித்துள்ளன. தொழிற்துறைக்கான கேர்ஸ் ஆக்ட் அக்டோபர் மாதம் காலாவதி ஆவதால் தொழிலாளர்கள் பெரும் பணத்தட்டுப்பாட்டால் அவதிபடும் அபாயமும் உள்ளது. இது விமானப் பணியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்க விமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து, முன்கூட்டியே ஓய்வு பெற்று சலுகைகளை பெறவும், தன்னார்வ விடுப்புகளை எடுத்து பணிச்சுமையை குறைக்க முடிவு செய்துள்ளனர். முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் 5 லட்சம் ஊழியர்கள் வரை பணிபுரிந்து வந்த நிலையில், ஜூன் மாத இறுதியில், 3 லட்சம் ஊழியர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏற்கனவே, கொரேரனா வைரஸ் அச்சமூட்டும் நிலையில் இந்த செய்தி மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக விமானப்பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தரப்பில், 41000 ஊழியர்களை முன்னதாகவே பணி ஓய்வு அளிக்கவும், குறைந்தபட்ச சம்பளம் போன்ற சலுகைகளை அளிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உலகளவில் விமான நிறுவனங்கள் சார்பில், 84 பில்லியன் வரை வருவாய் இழப்பு வரை ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகளுக்கு விமானங்கள் செல்லாத நிலையில் அமெரிக்க விமான நிலையங்கள் இன்னும் இழப்பை சந்தித்து வருகிறது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடைட் ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட், ஜெட்ப்ளூ, உட்பட பல முன்னணி விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.