'சம்பளத்தில் அதிரடி மாற்றம்’... 'ஆட்கள் குறைப்பு'... ‘பிரபல நிறுவனம்’... ‘ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதம்’!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Nov 05, 2019 09:33 AM

காக்னிசென்ட் ஐடி நிறுவனம், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியான நிலையில், சம்பள உயர்வையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

Job cuts no increments Cognizant CEO\'s letter to employees

அமெரிக்கா நியூஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, பிரபல காக்னிசென்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, பிரையன் ஹம்ப்ரீஸ் தனது ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'செலவுகளை குறைக்கும் வகையில், 'Fit-for-Growth' என்ற அதிரடி திட்டத்தை நிறைவேற்ற  முடிவு எடுத்துள்ளது. அதன்படி, நடுநிலையிலிருந்து உயர் பதவிகள் வரை உள்ள, சுமார் 10,000 முதல் 12,000 பேரை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதில், 5,000 முதல் 7,000 ஊழியர்களுக்கு மட்டும் திறன் மேம்பாட்டு (Reskill) பயிற்சி அளித்து, வேறு பணிகளில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால், எப்படி பார்த்தாலும், சுமார் 6,000 ஊழியர்கள் பணியை விட்டு நிரந்தரமாக வெளியேறுவார்கள். ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கும் அதேவேளையில், ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தில் (Pyramid), அனைத்து வகைகளிலும் மாற்றம் கொண்டுவர முடிவுசெய்துள்ளது.

அந்தவகையில், மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் வகிக்கும், ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சம்பளம் தொடர்பான விஷயங்களை, அடுத்த ஆண்டு வரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் மூலம், செலவினங்கள் குறைந்து, நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்க, தெளிவான ஒரு முடிவு கிடைக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : #COGNIZANT #EMPLOYEE #LETTER #LAYOFF