‘உலகளவில் பெஸ்ட் CEO-க்கள்’... ‘டாப் 10-ல் இடம் பிடித்த 3 இந்தியர்கள்’... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Oct 29, 2019 06:46 PM

உலக அளவில் சிறப்பாக பணியாற்றும் தலைமை செயல் அதிகாரிகள் (CEO) பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர், முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.

3 Indian origin CEO feature among HBR top 10 best list

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ (HBD), 2019-ம் ஆண்டின் சிறந்த 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில், பணியாற்றும் சி.இ.ஓ.க்களின் நிதிநிலை செயல்திறனை மட்டும் கணக்கில் கொள்ளாது, சுற்றுச்சூழல், சமூக நலன், மற்றும் ஆளுமை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர். அதன்படி,  அடோப் (Adobe) நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6-வது இடமும், மாஸ்டர்கார்டு (MasterCard) நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7-வது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சத்ய நாதெல்லா, 9-வது இடமும் பிடித்துள்ளனர்.

மேலும், டிபிஎஸ் (DBS) வங்கியின் பியூஸ் குப்தா 89-வது இடத்திலும், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் 62-வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் இடத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான, நிவிடியாஸ் (NVIDIA) என்கிற நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரி ஜென்சென் ஹாங் பிடித்துள்ளார்.

Tags : #SHANTANUNARAYEN #AJAYBANGA #SATYANADELLA #CEO #TOP10