மரங்களில் தொங்கவிடப்பட்டுள்ள ஸ்மார்ட் ஃபோன்கள்!.. 'ஊழியர்கள்' எடுத்த 'அதிரடி' முடிவு!.. அதிர்ந்துபோன 'அமேசான்' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > உலகம்டெலிவரி ஆர்டர்களை முந்தி எடுப்பதற்காக அமேசான் வாகன ஓட்டுனர்கள் ஸ்மார் ஃபோன்களை மரங்களில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள விநியோக நிலையங்கள் மற்றும் கடைகள் அருகே, மரங்களில் ஸ்மார்ட் ஃபோன்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. வித்தியாசமான இந்த நடவடிக்கையின் பின்னணியை விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மையால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த சூழலில், பணம் இல்லாமல் சிரமப்படும் ஊழியர்களுக்கு சிறிய வருமானம் கூட பெரும் உதவியாய் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அமேசான் ஓட்டுனர்கள் நூதன முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அமேசான் செயலியைப் பொறுத்தமட்டில், பொருட்கள் விநியோகம் செய்யும்போது, அந்த நேரத்தில் அருகில் இருக்கும் டெலிவரி ஓட்டுனர்களைத் தான் கணிணி தேர்வு செய்யும். அது, ஓட்டுனர்களின் செல்போன் சிக்னலை வைத்து முடிவு செய்யப்படும். யாருடைய செல்போன் சிக்னல் மிக அருகில் இருக்கிறதோ, அந்த குறிப்பிட்ட ஓட்டுனருக்கு டெலிவரி வழங்கப்படும்.
இதன் விளைவாக, பதிவு செய்யப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்களை, விநியோக நிலையங்கள் அருகில் உள்ள மரங்களில் சில ஓட்டுனர்கள் தொங்கவிடுத்து, வேறு டெலிவரிக்குச் சென்றுவிடுவர். அவர்களின் மற்றொரு செல்போன் எண், மரங்களில் இருக்கும் ஸ்மார்ட் போன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெலிவரி ஆர்டர் இறுதியானதும், விரைவாக வந்து அடுத்த டெலிவரியை எடுத்துக் கொள்வர்.
ஒரு டெலிவரிக்கு $15 கிடைக்கும். மிக மோசமான இந்த பொருளாதார சிக்கலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே, ஓட்டுனர்கள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அமேசான் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனமும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
