'கொரோனா நேரத்தில் முடிந்த டீல்'... 'வால்மார்ட் இந்தியாவை வாங்கிய இந்திய நிறுவனம்'... 'மளிகை, துணி எல்லாம் மொத்தமா வாங்கலாம்'... வரப்போகும் அதிரடி சலுகைகள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்வால்மார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பிளிப்கார்ட் குழுமம் முழுவதுமாக வாங்கியுள்ளது. இதன் மூலம் சில்லறை வர்த்தகத்தில் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு வர்த்தகர்கள் மற்றும் குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் சில்லறை வர்த்தகத்துக்கான பிரதான சூழலாக விளங்கி வருகிறது. இவற்றை இலக்காகக் கொண்டு பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை என்பது அமையும். தற்போது வால்மார்ட் இந்தியாவை பிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளதன் மூலம், மளிகை பொருட்கள், பிற பொதுவான பொருட்கள், ஃபேஷன் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் மொத்தமாக வாங்குவதற்கு ஒரே அங்காடியாக பிளிப்கார்ட் இருக்கும்.
வர்த்தகர்களுக்கு இதனால் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களும், ஊக்க விலை சலுகைகளும் இங்குக் கிடைக்கும். தற்போது 15 லட்சம் வர்த்தகர்கள், சிறு வணிகர்கள் தங்களது உறுப்பினர்களாக உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.இனிமேல் இந்தியத் தயாரிப்புகள், உள்ளூர் தயாரிப்புகள், விற்பனையாளர்களும் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து பொருட்களை விற்பனை செய்யலாம். . பிளிப்கார்ட் குழுமம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சில்லறை வர்த்தகத்தில் மிகப்பெரிய போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பிளிப்கார்ட் மொத்த விற்பனை செயல்பாடு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும், முதல் கட்டமாக மளிகை மற்றும் ஃபேஷன் பொருட்கள் விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரிவுக்குத் தலைவராக பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆஷர்ஷ் மேனன் செயல்படுவார் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.