"கோடான கோடி 'நன்றி'ங்கோ"... 'பேரிடர்' காலத்திலும் 'இந்திய' இளைஞர்களுக்காக,,... 'வேலைவாய்ப்பு'களை அறிவித்துள்ள முன்னணி 'நிறுவனங்கள்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்தியாவில் மட்டும் கொரோனா பேரிடர் காலத்தில், இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் வேலையிழந்துள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. வேலையில்லாத காரணத்தால், பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் சில இந்தியாவில் புதிதாக ஆட்சேர்ப்பு நடத்துவதாக தகவலை வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர் உட்பட பல பணிக்கான காலியிடங்கள் குறித்து தகவலை வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திலும், சாஃப்ட்வேர் இன்ஜினியர் உட்பட பல பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எச்.சி.எல், கூகுள், அமேசான், டாடா, உட்பட பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாக இளைஞர்களை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.
கொரோனா பேரிடர் காலம் என்பதால் இந்தியாவில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்களின் இந்த அறிவிப்பு நிச்சயம் பலருக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
