பிரபல தொகுப்பாளினி நெகிழ்ச்சி - மாடியில் நிலா சோறு - யாருக்கு ஊட்டி விடுறாங்க பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இந்த நாட்களை கழித்து வந்தனர்.

பிரபல தொகுப்பாளினி நெகிழ்ச்சி மாடியில் நிலா சோறு popular anchor celebrating lockdown with friends in the village

கிராமத்து வாழ்க்கையின் மன அமைதியும், சந்தோஷமும் அவரை மிகவும் ஈர்த்தது. அவ்வப்போது கிராமத்தினர் உடன் சேர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் அவரது பதிவுகளை ரசிகர்கள் மிகவும் விரும்பி வந்தனர். அந்த வகையில் இன்று தொகுப்பாளினி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த கிராமத்தை மிகவும் மிஸ் செய்வதாக கூறி அவர்களுடன் கடைசி நாள் மொட்டை மாடியில் நிலா சோறு உண்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக  இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல தொகுப்பாளினி நெகிழ்ச்சி மாடியில் நிலா சோறு popular anchor celebrating lockdown with friends in the village

People looking for online information on Corona, Covid19, Manimegalai will find this news story useful.