60வது பிறந்தநாளில் வைரஸிற்கு எதிராக களமிறங்கிய லாலேட்டன் - குவியும் பாராட்டு !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கம்ப்ளீட் ஆக்டர் (Complete Actor) என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் மோகன்லால். அந்த அளவுக்கு  ஒரு நடிகராக எந்த வேடம் ஏற்றாலும் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் துல்லியமாக வெளிப்படுத்தி ரசிகர்களை மெய்  சிலிர்க்க செய்துவிடுவார்.

Mohanlal donates PPE kits for Coronavirus to Mumbai Municipal Corporation hospital | மும்பை மருத்துவமனைக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கிய மோகன்லா

நடிகர் மோகன்லால் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் மணிரத்னத்தின் 'இருவர்', 'சிறைச்சாலை', 'உன்னைப் போல் ஒருவன்', 'ஜில்லா' போன்ற படங்களின் மூலம் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்க வேடங்களை செய்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று (21/05/2020 ) நடிகர் மோகன்லால் தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் Behindwoods Ice சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தனது அப்பா  விஷ்வநாதன் மற்றும் அம்மா சாந்தகுமாரி பெயரில் விஷ்வசாந்தி ஃபவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் விதமாக மும்பை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பு உபகரணங்களான PPE கருவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

60வது பிறந்தநாளில் வைரஸிற்கு எதிராக களமிறங்கிய லாலேட்டன் - குவியும் பாராட்டு ! வீடியோ

Entertainment sub editor