''பாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்குறத விட...!" - அப்பா, அம்மாவை சந்தோஷப்படுத்த நினைத்த ஷாந்தனு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 

நடிகர் ஷாந்தனு வெளியிட்ட சந்தோஷமான பதிவு | vijay's master actor shanthnu posts a thanks note for his shortfilm success

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் ஷாந்தனு. இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் அண்மையில், வீட்டில் இருந்தபடி, தன் மனைவியுடன் சேர்ந்த 'கொஞ்சம் கொரோனா நிறைய காதல்' எனும் குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் ஷாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில், என் பங்குக்கு சின்னதா ஒரு நல்ல விஷயம் பதிவு பண்ண யோசிச்சேன். பாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்குறதை விட, படம் எழுதி டைரக்ட் பண்ணி, ஒரு குறும்படமா வெளியிடுறதுதான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்துமுன்னு தோனுச்சு' என கூறிய அவர், தான் எடுத்து பதிவிட்ட குறும்படம் யூடியூபில் 8 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் இந்த ஆதரவு,  பயத்தையும் கடமை உணர்ச்சியையும் கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்து, அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ஷாந்தனு வெளியிட்ட சந்தோஷமான பதிவு | vijay's master actor shanthnu posts a thanks note for his shortfilm success

People looking for online information on Konjam Corona Naraiya Kadhal, Master, Shanthanu Bhagyaraj will find this news story useful.