Bigg Boss Tamil 3: ‘ஒரு நாள் கல்யாணம் அது..’-முன்னாள் கணவரின் Viral Pic குறித்து மீரா மிதுன்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 30, 2019 06:17 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து 4வது போட்டியாளராக வெளியேறிய மீரா மிதுன், பிக் பாஸ் அனுபவம் குறித்தும், வைரலாகும் தனது முன்னாள் கணவரின் புகைப்படம் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா ஆகியோரை தொடர்ந்து 4வதாக மீரா மிதுன் வெளியேறினார். சேரன் மீது குற்றம்சாட்டியது காரணமாக மக்களின் வெறுப்பை சம்பாத்தித்த மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், Behindwoods-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்த மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டது குறித்தும், ஹவுஸ்மேட்ஸ் அவர் மீது சுமத்திய குற்றாச்சாட்டுகள் குறித்தும் பேசினார். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் மீரா மிதுனின் கணவரின் புகைப்படம் மற்றும் அவரது திருமணம் குறித்து கேட்டபோது, ‘அது அப்பா அம்மா பார்த்து வைத்த ஒரு சோசியல் மேரேஜ். ஒரு நாள் கூட அது நிலைக்கவில்லை. அந்த திருமணம் பதிவு கூட செய்யப்படவில்லை. தற்போது பப்ளிசிட்டிக்காக அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்து வருகிறார்’ என்று மீரா தெரிவித்தார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் யார் டைட்டில் வெற்றிபெறுவார் என்று கேட்டதற்கு பதில் கூறிய மீரா, ‘சாண்டி வெற்றிபெற வாய்ப்புள்ளது. ஆனால் தர்ஷன் கடுமையான போட்டியாளராக இருப்பார்’ என்றார். தனக்கு பின் அடுத்ததாக சாக்ஷி அல்லது மதுமிதா எலிமினேட் ஆக வாய்ப்பிருப்பதாக மீரா மிதுன் கருத்து தெரிவித்தார்.
BIGG BOSS TAMIL 3: ‘ஒரு நாள் கல்யாணம் அது..’-முன்னாள் கணவரின் VIRAL PIC குறித்து மீரா மிதுன் வீடியோ