Open Nomination Twist: 'இவள் தான் அவளா? அவன ஒன்னுமே சொல்லக் கூடாதா?' - முறியும் சாக்ஷி-கவின் Friendship?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 30, 2019 12:08 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதன்முறையாக நடந்த ஓபன் நாமினேஷனால் சாக்ஷி மற்றும் கவின் Friendship இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சண்டையை விட நடொஉ, அதையும் தாண்டி புனிதமான சம்பவங்களே அதிகம் நடந்துக் கொண்டிருக்கிறது. அதில் ஹைலைட்டானது சாக்ஷி-கவின் - லொஸ்லியா ஆகியோரின் முக்கோண நட்பு. கவின் லொஸ்லியாவிடம் நெருக்கமாவதை விரும்பாத சாக்ஷி, கவின்-சாக்ஷி-க்கு நடுவில் தான் நுழைந்துவிட்டதாக வருந்தும் லொஸ்லியா, ரெண்டு பேருமே Friends தான் ஆனா Flirt பண்ணுவேன் என அவர்களின் Feelings உடன் விளையாடும் கவின்.
இப்படி இருக்கும் சூழலில் கவின் கிராமிய டாஸ்க்கின் முடிவில் சாக்ஷியின் performace குறித்து கமெண்ட் செய்தது இருவருக்கும் இடையேயான Friendship-ல் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் முதன்முறையாக ஓபன் நாமினேஷன் 36ம் நாள் எபிசோடில் நடைபெற்றது. அப்போது கவின் தன்னிடம் கோபப்பட்டதற்கும், இருவருக்கும் Friendship-ஐ தெளிவுப்படுத்த தவறியதற்கும் அவரை நாமினேட் செய்வதாக சாக்ஷி கூறினார்.
இதையடுத்து, செய்த தவறுக்கும், கோபமாக கத்தியதற்கும் செருப்பால் வேண்டுமானாலும் அடித்துக் கொள் என கூறி மன்னிப்பு கேட்ட பிறகும், மன்னித்துவிட்டேன் எனக் கூறிய பிறகும் அதை காரணம் காட்டி சாக்ஷி தன்னை நாமினேட் செய்ததால் கவின் கடும் கோபம் அடைந்தார். இந்த நாமினேஷனை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை என கவின் கவலையில் மூழ்கினார்.
தற்போது, புதிய புரொமோ வீடியோயில், சாக்ஷியை முழுவதுமாக ஓரம்கட்டிவிட்டு லொஸ்லியாவுடன் கவின் Flirt செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.