காதலே காதலே..! ஜானுவாக லாஸ்லியா அப்போ ராம் ? பிக் பாஸ் ப்ரோமோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 30, 2019 10:25 AM
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் 'போடு ஆட்டம் போடு' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
சேரனுக்கு ரஜினி, கவினுக்கு அஜித், சரவணனுக்கு விஜயகாந்த், சாண்டிக்கு சிம்பு, முகினுக்கு விஜய் என ஒவ்வொருவருக்கும் ஒரு கெட்டப் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண் போட்டியாளர்களுக்கு பழைய நடிகைகளின் கெட்டப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்காவது ஜாலியாக இறுதிவரை இருக்குமா? அல்லது கடந்த வாரம் நிகழ்ந்த கிராமத்து டாஸ்க் போல் இந்த டாஸ்க்கிலும் முட்டல் மோதல் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இதுவொரு லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக இருந்தாலும், இந்த டாஸ்க்கை நன்றாக விளையாடுபவர்களில் ஒருவர் அடுத்தவார கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்பதால் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டராகவே மாறி விடுகின்றனர். டாஸ்க்கை ஏனோதானோ என்று செய்யும் சரவணன் கூட இந்த டாஸ்க்கில் அசல் விஜயகாந்தாகவே மாறிவிட்டது ஆச்சரியம் அளிக்கின்றது.
PROMO 2 : சிம்புவின் கதாபாத்திரம் சாண்டிக்கு கொடுக்கப்பட்டிள்ளது. அவருக்கு சொல்லவா வேண்டும் நடனத்தில் சிம்புவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல, அந்த அளவிற்கு செம்ம மாஸாக நடனமாடுகிறார்.
அவருடன் சேர்ந்து சாக்ஷி, லொஸ்லியா ஷெரின் உள்ளிட்டோர் டான்ஸ் ஆடுகின்றனர். இந்த ப்ரோமோ வீடியோவின் இறுதியில் சாண்டி பெண்களுடன் வம்பிழுக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் சரவணன் மற்றும் சாண்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் பொருத்தமாக உள்ளது என்று கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
காதலே காதலே..! ஜானுவாக லாஸ்லியா அப்போ ராம் ? பிக் பாஸ் ப்ரோமோ இதோ வீடியோ