Bigg Boss Tamil 3: ‘எம்மா சாக்ஷி நம்ம பிரச்சனையே இங்க திண்டாடுது..’ இதுல அபி-க்கு Free Advice?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 29, 2019 10:59 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் பிரச்சனை பெரும் பிரச்சனையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் புதிய பிரச்சனைகளை காட்டிலும், காதல் பிரச்சனைகள் தினசரி நடக்கிறது. ஒரு புறம் கவின் - சாக்ஷி-லொஸ்லியா சம்மந்தப்பட்ட விவகாரமும், மறுபுறம் அதையும் தாண்டி புனிதமான அபிராமி-முகென் காதல் கதையும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 35ம் நாள் எபிசோடில், சாக்ஷி தனது தோழி அபிராமிக்கு சில அறிவுரைகளை வழங்கியது, பார்வையாளர்களை உன்னுடைய பிரச்சனைக்கு யாரு இப்படி அறிவுரை கூறுவார்கள் என்று யோசிக்க வைத்தது.
முகென் தனக்கு ஒரு காதல் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருப்பதாக அபியுடம் கூறியும், ‘எனக்கு பிடிச்சிருக்கு.. எனக்கு மனசு மாற கொஞ்சம் டைம் எடுக்கும்.. நான் உன்ன லவ் பண்ணிட்டு இருக்கேன்’ என அபிராமி கூறியுள்ளார். அபிராமி முகென் மீது காதல் வயப்பட, அவர் நீ எனக்கு ஒரு நல்ல Friend தான் என்ற டிராக்கில் சென்றுக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே, அபிராமி முகென் மீது அதிக அன்பு செலுத்துவதால், முகென் தனி மனிதனாக இந்த வீட்டில் தனது அடையாளத்தை தொலைப்பதாக கருதுவதாக சாக்ஷி அபிராமியிடம் கூறினார். சாக்ஷி கூறுகையில், ‘அபி நீ முகெனுக்காக இங்கு வரவில்லை. நீ ரொம்ப நேர்மையா இருக்க.. இங்க இருந்து வெளிய போனதும் 10 டைரக்டர்கள் படம் தருவார்கள் உனக்கு. முகென் Back Seat எடுத்திருக்கான். ஒரு Friend-ஆ நீ தான் அவனோட Talent-அ வெளிய கொண்டு வரணும்’ என்றார்.
இதனை ஆலோசித்த அபிராமி, முகெனிடம் சென்று இது குறித்து விவாதித்ததுடன், பழையபடி அனைத்து விஷயங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளும்படி தெரிவித்தார். சாக்ஷி நல்ல நோக்கத்தில் அபிக்கு அறிவுரை கூறியது போல், கவினுக்காக சாக்ஷி பிக் பாஸ் வரவில்லை என்பதை உணர்ந்து, விளையாட்டில் கவனம் செலுத்தினால் சரியாக இருக்கும் என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.