பிக்பாஸில் மீரா மிதுனின் குறும்பட நிகழ்வு குறித்து சின்மயி ஆவேசம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 29, 2019 02:09 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியில் இருந்து மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு முந்தைய தினம் சேரன் மீது மீரா சொன்ன குற்றச்சாட்டை கமல் குறும்படம் மூலம் பொய்யாக்கினார்.

அப்போதும் மீரா எனக்கு அவர் செய்தது அப்படித்தான் இருந்தது. உண்மை ஒருநாள் தெரியவரும் என்றெல்லாம் பேசிக்கொண்டே இருந்தார். அப்போது பஸ்ல கூட்டமா இருக்கும் போது இதுலாம் சகஜம் என்பது போல கமல் பேசினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சரவணன் காலேஜ் படிக்கும் போது பண்ணிருக்கேன் என்கிறார். அதற்கு பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பு சத்தம் எழுந்தது. அதற்கு பிரபல பாடகி சின்மயி, ஒரு தமிழ் சேனல்ல பஸ்ல பெண்களிடம் தவறாக நடந்துகொள்வேன் என்று சொன்னதை ஒளிபரப்புகிறார்கள். அதற்கு மக்கள் கைத்தட்டுகிறார்கள். என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸில் மீரா மிதுனின் குறும்பட நிகழ்வு குறித்து சின்மயி ஆவேசம் வீடியோ
Tags : Chinmayee, Kamal Haasan, Bigg Boss 3, Kavin