Bigg Boss Tamil 3: உங்க சோகத்துக்கு காரணம் இது தானா? - லாஸ்லியா ஆர்மியினர் கவலை தீர்ந்தது
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 29, 2019 12:14 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக லொஸ்லியாவின் நடவடிக்கைகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்தே லொஸ்லியா வித்தியாசமாக நடந்துக் கொள்வதாக ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கான காரணத்தை லொஸ்லியா வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரத்துக்கு முந்தின வாரம் கவின், சாக்ஷி மற்றும் லொஸ்லியா இடையில் ஏற்பட்ட முக்கோண காதல், நட்பு விவகாரம் பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனையை கிளப்பியது. இதனால் சாக்ஷி மிகுந்த மன வருத்ததிற்கு ஆளானார். இந்த பிரச்சனையை கூலாக லாஸ்லியா டீல் செய்திருந்தாலும், அவரும் மனதளவில் காயப்பட்டிருக்கிறார் என்பதே லொஸ்லியாவின் வித்தியாசமான நடவடிக்கைகளுக்கு காரணமாக தெரிகிறது.
லொஸ்லியா ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என மக்களும், அவரது ஆர்மியினரும் குழப்பத்தில் இருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாகவும், அதில் இருந்து வெளியில் வருவதற்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது பற்றி சேரன் அப்பா, தர்ஷன் அண்ணாவிடம் பேசி அந்த விஷயத்தில் இருந்து வெளியே வரும்படி அபிராமி அறிவுரை கூறினார். ஆனால், ‘ஒரு விஷயத்தில் நான் Hurt ஆனாலும், ஒருவரிடம் பேசுவது மூலம் அதில் இருந்து வெளியே வர மாட்டேன். நானாக நினைத்து வெளியில் வர வேண்டும்’ என்று லொஸ்லியா தெரிவித்தார்.