777 Charlie Trailer

ஆர்யா நடிக்கும் ‘கேப்டன்’… இமான் இசையில் பாடும் பிரபல இசையமைப்பாளர்… Exciting தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்துக்கு இமான் இசையமைத்து வரும் நிலையில் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

Yuvan Shankar Raja sung a song in imman music captain movie

ஆர்யா நடிக்கும் ‘கேப்டன்’

'டெடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர்  தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும் மீண்டும்  ‘கேப்டன்’ என்ற படத்தில் இணைந்துள்ளனர். இந்த திரைப்படம் சயின்ஸ்பிக்சன்  ஜானரில் உருவாக்கப்படுகிறது. இப்படத்தை  Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின் The Show People உடன்  இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி,  தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

Yuvan Shankar Raja sung a song in imman music captain movie

நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள்…

‘கேப்டன்’ படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் மற்றும் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர். டெடி படத்தில் ஹிட் பாடல்களை அளித்த D இமான் மீண்டும் சக்தி சௌந்தர்ராஜனோடு இணைந்துள்ளார். S.யுவா ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), R. சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), S.S. மூர்த்தி (கலை), மற்றும் V. அருண் ராஜ் (சிஜி) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Yuvan Shankar Raja sung a song in imman music captain movie

இமான் இசையில் யுவன்…

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் இமான் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் “மதன் கார்க்கி வரிகளில் இனிமையான மெலோடி பாடலை யுவன் குரலில் பதிவு செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். இந்த தகவல் இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக யுவன் இசையமைத்த பிரியாணி படத்தில் இமான் ஒரு பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yuvan Shankar Raja sung a song in imman music captain movie

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan Shankar Raja sung a song in imman music captain movie

People looking for online information on Arya, Captain, Imman, Sakthi Sounderrajan will find this news story useful.