777 Charlie Trailer

”கடவுள் கருணை… பெற்றோர் ஆசியும்…” நயன்தாராவுடன் திருமணம்… விக்கி நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Nayanthara vignesh shivan married viral tweet and pic

இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்துக்குப் பிறகு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நட்சத்திர ஜோடிகள்

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

Nayanthara vignesh shivan married viral tweet and pic

திருமணம்

இந்நிலையில் இன்று (ஜூன் 9) விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற நட்சத்திர ஓட்டல் இன்று ஜூன் 9 ஆம் தேதி நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல திரையுலகப் பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி…

இந்நிலையில் திருமணம் முடிந்துள்ள நிலையில் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதையடுத்து மணமகனான விக்னேஷ் சிவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “10 என்ற அளவுகோலில், அவர்  9 என்றால் நான் 1. கடவுளின் கருணையோடும், பெற்றோர்களின் ஆசிகளோடும், நண்பர்களின் வாழ்த்துகளோடும், நான் நயன்தாராவை திருமணம் செய்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவோடு நயன்தாராவை முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Nayanthara vignesh shivan married viral tweet and pic

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara vignesh shivan married viral tweet and pic

People looking for online information on Nayanthara wedding, Vignesh shivan will find this news story useful.