Nenjuku Needhi

மாயமான பிரபல பாடகி.. 12 நாட்களுக்கு அப்பறம் தெரியவந்த உண்மை..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகி ஒருவர் மாயமான வழக்கில், திடீர் திருப்புமுனையாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Popular Singer Sangeetha body found in Haryana

Also Read | ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியான ‘Top Gun Maverick’… டாம் க்ரூஸுக்கு ‘Palme d’Or’ விருது

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சங்கீதா. பிரபல பாடகியான இவர் பிராந்திய மொழியில் பாடி வந்தார். டெல்லியில் வசித்து வந்த சங்கீதாவை கடந்த 12 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சங்கீதா கடத்தப்பட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிந்திருந்த நிலையில், திருப்புமுனையாக அவர் கொல்லப்பட்டதாக தற்போது காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Popular Singer Sangeetha body found in Haryana

அதிர்ச்சி

பிரபல பாடகியான சங்கீதா கடத்தப்பட்டதாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டுவந்த நிலையில், ஹரியானா மாநிலம் பைனி பைரன் கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், அது சங்கீதா தான் என தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக ரவி மற்றும் ரோஹித் ஆகிய இருவரை காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. சங்கீதாவை கொலை செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular Singer Sangeetha body found in Haryana

இசை வீடியோ எடுப்பதற்காக சங்கீதாவை அழைத்துச் சென்று, அவரை கொலை செய்ததாக ரவி மற்றும் ரோஹித் கூறியதாக தெரிகிறது. சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ரோஹித் உடன் சங்கீதா உணவு சாப்பிடும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் சிக்கியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

பிரபல பாடகி கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருடன் பணிபுரிந்த நபர்களே அவரை கொலை செய்ததாக காவல்துறை தற்போது தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Also Read | “கடவுளின் தேசத்தில் கமல்ஹாசன்”… ‘விக்ரம்’ விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் மாஸ் update

தொடர்புடைய இணைப்புகள்

Popular Singer Sangeetha body found in Haryana

People looking for online information on Haryana, Popular Singer Sangeetha, Sangeetha, Singer will find this news story useful.