நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் விருந்தோம்பல் பண்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் போனி கபூர் தனது தன் முதல் படமான ‘ஹம் பாஞ்ச்’ முதல் சமீபத்திய ‘மாம்’ படம் வரை, தனது படக்குழுவினருக்கும், நடிகர்களுக்கும் மிகச்சிறந்த விரும்தோம்பல் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Nerkonda Paarvai Producer Boney Kapoor loves playing a perfect host to his cast & crew

தயாரிப்பாளர் போனி கபூர் நட்புக்கு மட்டுமல்லாமல், தனது நண்பர்கள், படக்குழுவினர், படத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருந்து அளிப்பதில் மிகவும் பிரபலமானவர். எளிமையை விரும்பும் தயாரிப்பாளர் போனி கபூர், கடந்த 1979/80ல் தயாரித்த அவரது முதல் திரைப்படமான "ஹம் பாஞ்ச்" முதலே தனது குழுவினருக்கு எந்த குறையும் இல்லாமல் நன்றாக நடத்துவதில் மிகவும் கவனத்துடன் இருப்பவர்.

ஹம் பாஞ்ச் படத்தின் ஷூட்டிங்கின் போது, அருகில் ஹோட்டல் வசதி ஏதும் இல்லாத காரணத்தால், அங்கிருந்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு 100 மைல் தூரம் செல்ல வேண்டும் என்பதால் க்ழிவறைகளுடன் கூடிய காட்டேஜ்களை கட்டிக் கொடுத்தார். மேலும், படக்குழுவினரை உற்சாகப்படுத்த சினிமா தியேட்டர், உள்விளையாட்டுகளுக்கு தனியாக இரண்டு காட்டேஜ்களை அமைத்துக் கொடுத்தார். பேட்மிண்டன் கோர்ட் மற்றும் நடிகர், நடிகைகள் பொழுதுபோக்குக்கு 40 வேறுபட்ட திரைப்படங்களையும் தேர்வு செய்து கொடுத்தார்.

போனி கபூர் தனது முதல் படம் தொடங்கி மாம் படம் வரை தனது படக்குழுவினருக்கு சிறந்த விருந்தோம்பலை அளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சஞ்சீவ் குமார், மிதுன் சக்ரபோர்த்தி, ராஜ் பாப்பர், குல்ஸன் குரோவர், ரஞ்சித் சூட், ஏ.கே.ஹங்கல் மற்றும் உதய் சந்திரா ஆகியோர் உணவருந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஜார்ஜியாவின் பனி மூடிய மலைகளில் படம் பிடிக்கப்பட்ட அவரது கடைசி படமான "மாம்" படத்தின் ஷூட்டிங்கின் போதும் இதே விஷயங்களை செய்துள்ளார். இந்த படம் போனி கபூருக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் இது ஸ்ரீதேவியின் 300வது படம் ஆகும்.

தற்போது முதன் முறையாக தமிழ் திரைப்படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம்  வரும் ஆகஸ்ட்.10ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவிருக்கிறார்.