‘இரும்புத்திரை 2’- விஷாலுடன் ஜோடி சேரும் நேர்கொண்ட பார்வை ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘அயோக்யா’ திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் ‘இரும்புத்திரை 2’ திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith's Nerkonda Paarvai Star Shraddha Srinath to be pairing with Vishal in his next

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ திரைப்படம் நல்ல  வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஷால் ‘இரும்புத்திரை 2’ திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் எழிலிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய ஆனந்த் என்பவர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘நேர்கொண்ட பார்வை’ நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தில் சமந்தா மனநல மருத்துவராக நடித்திருந்தார்.

இப்படத்தின் ஷூட்டிங் 3 நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், முழு ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது நானி நடிப்பில் வெளியான ‘ஜெர்சி’, அருள்நிதியின் ‘K13’ ஆகிய திரைப்படங்களின் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், அடுத்ததாக வரும் ஆகஸ்ட்.10ம் தேதி அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.