Breaking: பரியேறும் பெருமாள் இயக்குநருடன் தனுஷ் இணையும் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 01:14 PM
இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.
![Rajisha Vijayan to act in Dhanush and Mari Selvaraj's film Rajisha Vijayan to act in Dhanush and Mari Selvaraj's film](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/rajisha-vijayan-to-act-in-dhanush-and-mari-selvarajs-film-news-1.jpg)
இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.
இந்த படத்துக்கு கர்ணன் என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜீஷா விஜயன் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் மலையாளத்தில் அனுராக கரிக்கின் வெள்ளம், ஜூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Tags : Dhanush, Mari Selvaraj, Rajisha Vijayan