சங்கத்தமிழனுக்காக குரல் கொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 04, 2019 10:06 AM
விஜயா புரொடக்ஷன் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் 'சங்கத் தமிழன்'. இந்த படத்தை 'வாலு', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் எழுதி இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி நிறைவு செய்துள்ளார்.