கொஞ்சம் மெர்சல்... கொஞ்சம் விஸ்வாசம் - யோகிபாபு கலந்து கட்டி அடிக்கும் காக்டெயில் இது!
முகப்பு > சினிமா செய்திகள்யோகிபாபு நடித்துள்ள காக்டெயில் படத்தின் டீசர் காட்சி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
![யோகிபாபுவின் காக்டெயில் டீசர் | yogibabu's cocktail teaser is out யோகிபாபுவின் காக்டெயில் டீசர் | yogibabu's cocktail teaser is out](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/yogibabus-cocktail-teaser-is-out-news-1.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகிபாபு. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த யோகிபாபு, தனி ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்கிறார். இவர் கதாநாயகனாக நடித்த தர்மபிரபு, கூர்க்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து யோகிபாபு தற்போது நடித்துள்ள திரைப்படம் காக்டெயில். காக்டெயில் எனும் பறவையை வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் காக்டெயில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மெர்சல் படத்தில் விஜய் இன்ட்ரோ சீனும், விஸ்வாசம் படத்தில் வரும் அஜித்தின் டயலாக்கையும் கலந்து இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. ஐம்பொன் சிலை கடத்தலை மையமாக வைத்து காமெடி ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ரேஷ்மி கோபிநாத், மைம் கோபி, ஷாயாஜி ஷின்டே, வெட்டுக்கிளி பாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தை பி.ஜி.முத்தையா தயாரிக்க, இரா.விஜய்முருகன் இயக்குகிறார்.
கொஞ்சம் மெர்சல்... கொஞ்சம் விஸ்வாசம் - யோகிபாபு கலந்து கட்டி அடிக்கும் காக்டெயில் இது! வீடியோ