யோகி பாபு இப்போ புது மாப்பிள்ளை..! இனிதே முடிந்த திருமணம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

comedian yogi babu gets married today with manju parkavi

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. சின்ன சின்ன தோற்றங்களில் நடித்து வந்த யோகிபாபு, தனது நகைச்சுவையாலும் உடல் மொழியாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் தனது காமெடியால் அதிரடி காட்டினார்.

இந்நிலையில் யோகிபாபுவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும்   இன்று காலை (05.02.2020)  யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . வரும்  மார்ச்  மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Entertainment sub editor