கல்யாணம் முடிந்தது... அடுத்து காக்டெயில் ! யோகிபாபுவின் வெட்டிங் ட்ரீட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள காக்டெயில் படத்தின் செகன்ட் லுக் வெளியாகியுள்ளது.

yogi babu's cocktail movie second look is released

யோகிபாபு தற்போது நடித்துள்ள திரைப்படம் காக்டெயில். காக்கட்டூ பறவையை வைத்து இந்தியாவில் உருவாகியிருக்கும் முதல் படம் இதுவாகும். ரா.விஜயமுருகன் இயக்கும் இத்திரைப்படத்தை பி.ஜி.மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் யோகிபாபு முருகன் வேடத்தில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் படத்தில் செகன்ட் லுக் வெளியாகியுள்ளது. கலர்ஃபுல்லாக வந்திருக்கும் இந்த போஸ்டரில் விஜய் டிவி பாலா, நடிகர் ஷாயாகி ஷின்டே ஆகியோரும் உள்ளனர். இன்று யோகிபாபுவுக்கு திருமணம் நடைபெற்றிருந்த வேளையில், அவர் நடிக்கும் காக்டெயில் படத்தின் போஸ்டர் ரசிகர்களுக்கு வெட்டிங் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Entertainment sub editor