அசுரனுக்கு பிறகு இந்த Multi-Starrer படம் - 25 வருடம் கழித்து இணையும் கலைப்புலி தாணு!
முகப்பு > சினிமா செய்திகள்மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தை கலைப்புலி எஸ்.தாணு, தமிழ் நாட்டில் வெளியிடுகிறார்.

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர். இயக்குநர் ப்ரியதர்ஷன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார்.
இந்நிலையில் மரைக்காயர் படத்தை தமிழகத்தில் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து எஸ்.தாணு, 'சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான நம் கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான நம் கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் #MarakkarArabikadalinSingam @Mohanlal @priyadarshandir #prabhu @SunielVShetty @akarjunofficial pic.twitter.com/RhpohsWrdf
— Kalaippuli S Thanu (@theVcreations) February 21, 2020