யோகிபாபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கால் சர்ச்சை – காக்டெயில் டீம் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு விஜய், அஜித், ரஜினி, விஜய் சேதுபதி ஆகியோரின் படத்தின் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தர்மப்பிரபு, கூர்க்கா அகிய படங்களில் சோலா ஹீரோவாகவும் கலக்கி உள்ளார்.

Yogi babu cocktail first look controversy producer answers

இந்நிலையில் அவர் ஹீரோவாகும் அடுத்த படமான காக்டெயிலின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. காக்கட்டூ பறவையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை ரா.விஜயகுமார் இயக்க பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த பட  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் யோகி பாபு முருகன் வேடத்தில் இருந்தார்.  முருகன் படம் போட்டு காக்டெயில் என்ற மதுவின் பெயர் போஸ்டரில் இடம்பெற்றுள்ளதால் இது தங்களை புண்படுத்துவதாக சில மத ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி. முத்தையா, இது திட்டமிட்டு நிகழ்ந்ததல்ல. படத்தில் யோகிபாபு முருவனாக ஒரு காட்சியில் தோன்றுகிறார். மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கமும் எங்களுக்கு கிடையாது என கூறியுள்ளார்.

 

Entertainment sub editor

Tags : Yogi Babu