'கனா' படத்தின் வெற்றிக்கு பிறகு தர்ஷன் நடிக்கும் படம் 'தும்பா'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் காமெடி அட்வெஞ்சர் என்ற ஜானரில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்குகிறார். இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் விஜய் டிவி புகழ் தினாவும் நடித்துவருகிறார்.
இந்த படம் விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவருகிறது. இந்த படத்துக்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்திலிருந்து புதுசாட்டம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'புதுசாட்டம்' - அனிருத்தின் புதிய பாடல் இதோ ! வீடியோ