அப்பா எமன் கேள்விப்பட்டிருக்கீங்களா? - தர்மபிரபு Bloopers பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘தர்மபிரபு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Bloopers வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Yogi Babu's Dharmaprabhu official bloopers video has been released

முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு எமனாக நடித்துள்ள இப்படத்தில் கருணாகரன், ஜனனி ஐயர், ‘வத்திக்குச்சி' திலீபன், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஃபேண்டசி படமான ‘தர்மபிரபு’ திரைப்படம் கடந்த ஜூன்.28ம் தேதி வெளியாகியுள்ள ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுவரை எமன் பற்றிய கதைகளில் அப்பா எமன் என யாரையும் காட்டியதில்லை, ஆனால் இப்படத்தில் அப்பா எமனாக ராதாரவியும், அவரது மனைவியாக ரேகாவும், சித்திரகுப்தனாக ரமேஷ் திலக்கும் நடித்துள்ளனர்.

பூலோகத்தில் நடக்கும் தவறுகளை எல்லாம் எமலோகத்தில் எமன் தட்டிக் கேட்டால் எப்படி இருக்கும். மனிதனை கொன்றவனை மட்டுமல்லாமல், பூமியில் வாழும் விலங்குகளையும் கொல்லும் மனிதரை கொன்று எமலோகத்தில் எப்படியான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது என்பன போன்ற விஷயங்கள் இப்படத்தில் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

அப்பா எமன் கேள்விப்பட்டிருக்கீங்களா? - தர்மபிரபு BLOOPERS பாருங்க! வீடியோ