யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படம் தர்மபிரபு. முத்துகுமரன் இயக்கும் இப்படத்தில், வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி வரும் இதில், யோகிபாபு எமனாக நடிக்கிறார். அவரது தந்தையாக ராதாரவியும், சித்திரகுப்தனாக ரமேஷ் திலக்கும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தர்மபிரபு படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரைலர் இடம்பெற்றுள்ள நகைச்சுவை வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "பூலோகத்தில்தான் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி கிடைத்து கொண்டிருந்தது. இப்போது எமலோகத்திலுமா?", "இங்கு எல்லோரும் தகுதியுடன்தான் பதவியில் இருக்கிறார்களா?, அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா", "அக்கவுன்டில் பணம் போடுவதாக சொல்லிவிட்டு ஆடைகளாக போட்டுக்கொண்டிருக்கிறாரா... அவர் நமது அக்கவுன்டில் இருக்கிறாரா", என எல்லோரையுமே செமையாக கலாய்த்திருக்கிறார்கள்.
"வாரிசு அரசியலை தடுத்தே ஆக வேண்டும்" - யோகி பாபுவின் தர்மபிரபு ட்ரைலர் இதோ வீடியோ