Fakir Other Banner USA

''வெற்றி வந்த பிறகு...'' - யோகி பாபுவிற்கு பிரபல ஹீரோ அட்வைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா.

Yogi Babu starrer “Gurkha” album Sivakarthikeyan GV Prakash

ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நடிகர் சித்தார்த் கலந்து கொண்டு, வாழ்த்தி பேசினார்.

யோகிபாபுவை பார்த்து நான் வியந்திருக்கிறேன், அவர் ஒரு மிகச்சிறந்த ஒரு நடிகர். அவருடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். யோகிபாபு ஓய்வே இல்லாமல் உழைக்கிறார். வெற்றி வந்த பிறகு எல்லோரும் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். அது தான் மிக முக்கியம். இவர்களை போல நிறைய தயாரிப்பாளர்கள் வர வேண்டும், ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக இது அமைந்திருக்கிறது என்றார் நடிகர் சித்தார்த்.

இந்த விழாவில் நடிகர் ராஜ்பரத், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், சண்டைப்பயிற்சி இயக்குனர் பிசி, இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.