குறுகிய காலத்திலேயே தமிழில் முன்னணி காமெடியனாக வளர்ந்து வருபவர் யோகிபாபு. இவர் இல்லாத தமிழ் படங்களையே காண்பது அபூர்வமாகி வருகிறது. அந்த அளவுக்கு வெளியாகும் பெரும்பாலான படங்களில் அவர் இருக்கிறார். அவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது 'தர்மபிரபு', 'கூர்கா', 'ஜோம்பி' உள்ளிட்ட படங்களில் முதன்மை வேடத்தில் அவர் நடித்துவருகிறார். இந்நிலையில் 'பட்டிபுலம்' என்ற படத்தில் பேய் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்த படத்தை சந்திரா மீடியா விஷன் சார்பாக திருமுருகன் தயாரிக்க, சுரேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் வீரசமர், அமிதாராவ் கதாநாயகன் , கதாநாயகியாக நடிக்கின்றனர்.
இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் சுரேஷ், ''நான் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால், காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் யோகிபாபு அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் இல்லை படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி இருக்கிறார்.
கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு. அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது தான் கதை. படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம். படம் வரும் 22-ம் தேதி வெளியாகிறது'' என்றார்.