பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மபிரவு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு எமனாக நடித்துள்ள இப்படத்தின் டீசரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எமலோகத்தில் எமன் பதவி தேர்தல் நடப்பதையும், அதற்காக போட்டியிடும் எமன் வாரிசான யோகிபாபுவும், சித்ரகுப்தனாக இருக்கும் கருணாகரனும் போட்டியிடுவதும், அதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுவிதமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
லோக்கல் பாஷையில் அட்ராசிட்டி பண்ணும் ஹைடெக் எமன் - ‘தர்மபிரபு’ டீசர் இதோ வீடியோ