'ஏன்டா இப்படி ஆய்ட்ட?': பிரபல நடிகருக்காக கவலைப்பட்ட தளபதி விஜய் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து, அட்லி இயக்கி தளபதி விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Yogi Babu shares his experience in Thalapathy Vijay, AR Rahman, Nayanthara's Bigil

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து சிங்கப்  பெண்ணே, தளபதி விஜய் பாடியுள்ள வெறித்தனம் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் யோகி பாபு Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், சர்கார் படத்துக்கு பிறகு பிகில் படத்தில் தான் விஜய் என்னை சந்திக்கிறார். பார்த்ததும் 'ஏன்டா இப்படி ஆய்ட்ட?'  என்று கேட்டார். அதற்கு இல்லனா டைட் வொர்க் என்று சொன்னேன். பின்னர் உடம்பு பார்த்துக்கங்க என்றார். பின்னர் இயக்குநர் அட்லியிடம், இவர விட்ருங்க தூங்கட்டும் என்றார்.

'ஏன்டா இப்படி ஆய்ட்ட?': பிரபல நடிகருக்காக கவலைப்பட்ட தளபதி விஜய் - விவரம் இதோ வீடியோ