கருணாகரன், சுனைனாவுடன் யோகி பாபு செல்லும் "டிரிப்" - விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யோகி பாபு ஹீரோவாக நடித்த 'தர்மபிரபு', 'கூர்கா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ள நல்ல வரவேற்பைப் பெற்ற  நிலையில்  இவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலில் வெளியாகியுள்ளது.

Yogi Babu, Karunakaran team up for a dark comedy Trip

யோகிபாபு ஹீரோவாக நடித்து வரும் புதிய  படத்துக்கு 'ட்ரிப்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டெனிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கி வருகிறார். யோகிபாபு உடன் கருணாகரன் மற்றும் சுனைனா நடித்துள்ள இந்த படத்தை சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்கு சித்துகுமார் என்பவர் இசையமைத்துள்ளார். உதயசங்கர் ஒளிப்பதிவில் தீபக் துவாரகநாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்படுகிறது