BREAKING : விஷாலின் "ஆக்சன்" படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 03, 2019 02:03 PM
'ஆம்பள' படத்துக்கு பிறகு விஷால் - சுந்தர்.சி இணைந்துள்ள படம் 'ஆக்சன்'. இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றனர் , யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் விஷால் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இப்படத்தில் வில்லனாக நடக்கும் கபீர் துஹான் சிங் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.