லைட், கேமரா, ஆக்ஷன் - ஆர்யா நடித்துள்ள 'மகாமுனி' படத்தின் Making Video இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 03, 2019 06:41 PM
ஸ்டுடியோ கிரீன சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து, ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் 'மகாமுனி'. 'மௌன குரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சாபு ஜோசப் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் சுவாரஸியமான சில நிமிட காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவற்பை பெற்று வருகிறது.
தற்போது இந்த படம் உருவான விதம் நான்கு நிமிட வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவு, விதவிதமான இடங்கள் என நடிகர்களின் நடிப்பு, வசன ஒலிப்பதிவு என முழுமையான வீடியோவாக வெளியாகியுள்ளது.
லைட், கேமரா, ஆக்ஷன் - ஆர்யா நடித்துள்ள 'மகாமுனி' படத்தின் MAKING VIDEO இதோ வீடியோ