தளபதி ஸ்டாலினைச் சந்தித்த தளபதி விஜய் - விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 05:05 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் அட்லி இயக்கி தளபதி விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் சிங்கப் பெண்ணே, வெறித்தனம் போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் முரசொலி செல்வம் தம்பதியினரின் பேத்தி ஓவியா - அக்னீஸ்வரனின் நிச்சயதார்த்த விழா ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. உடன் துரைமுருகன் இருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.